மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் இரண்டு ஆண்டுகள் போடப்படாத தார் சாலையால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தரங்கம்பாடி தாலுகாவில் கிராமசாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
கற்களால் மட்டும் நிரப்பப்பட்ட சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து முற்றிலும் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் அதிகளவில் புழுதி பறப்பதால் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.