மக்களவைத் தேர்தலில் வென்று இண்டி கூட்டணி ஆட்சியமைத்தால், ஆகஸ்ட் 15 முதல் 30ஆம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜார்க்கண்டில் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் கடந்த 12 மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பிரதமர் மோடி வேலைவாய்ப்பு அளித்திருப்பதாகவும், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் ஏராளமானோர் கடன் பெற்று சொந்த தொழில் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.