இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2019-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வென்றார். பின்னர், பொருளாதார சீர்குலைவு காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் அவர் பதவி விலக நேர்ந்தது.
அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்ற நிலையில், தற்போதைய அரசின் பதவிக்காலம் வரும் நவம்பருடன் நிறைவடைவதால், அடுத்த அதிபர் தேர்தல் செப்டம்பர் 17-இல் தொடங்கி அக்டோபர் 16 -இல் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.