“திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்டவை அதிகரித்துள்ளது” என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“இண்டி கூட்டணி பிரிவினைவாத முழக்கங்களை முன்வைத்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும், “திமுக நடத்திய முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் எவ்வளவு முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளது என வெள்ளை அறிக்கை தர முடியுமா? என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய நாராயணன் திருப்பதி, வேலைவாய்ப்பின்மை குறித்து காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என்றார்.