உலக அளவில் புலம் பெயர்ந்தோரால் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் பணம் அனுப்பப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
உலக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, 2024-ம் ஆண்டுக்கான தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா, மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், புலம் பெயர்ந்தவர்களால் பணம் அனுப்பப்படும் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இருப்பினும், 111 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் பணம் அனுப்பியதன் மூலம் இந்தியா முதலிடத்தைப் பிடித்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.