புதுடெல்லியில் டென்மார்க் தூதரகம் அருகே நிறைந்துள்ள குப்பைகளை அகற்றக் கோரி அந்நாட்டின் தூதர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், டெல்லி மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றியது.
புதுடெல்லியில் உள்ள டென்மார்க் தூதரகம் அருகே, குப்பைகள் நிறைந்திருப்பதாக, அந்நாட்டின் தூதர் ஃப்ரெடி ஸ்வான் எக்ஸ் தள பக்கத்தில் 30 வினாடிகள் உள்ள வீடியோவை பதிவேற்றியிருந்தார்.
இந்த எக்ஸ் தள பதிவு வைரலானதையடுத்து, டெல்லி மாநகராட்சி நிர்வாகம் டென்மார்க் தூதரகம் அருகே நிரம்பியிருந்த குப்பைகளை விரைந்து அப்புறப்படுத்தியது.