கோவையில் உள்ள பிரபல நகைக்கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி கடைவீதியில் பிரபு என்பவருக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரிஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.