தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மழை பெய்த நிலையில், சேதம் அடைந்த பேருந்துக்குள் பயணிகள் நனைந்தவாறு சென்றனர்.
திண்டுக்கல்லிருந்து போடி வழியாக தேவாரம் சென்ற அரசு பேருந்து ஜன்னல்கள் உடைந்து, மேற்கூரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென மழை பெய்ததால் பேருந்துக்குள் நீர் கொட்ட தொடங்கியது. இதனால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.