திருச்செந்தூரில் கடல் நீர் மீண்டும் 100 அடி தூரம் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் முதலில் கடலில் குளித்த பிறகே கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், திருச்செந்தூர் கடல் நீர் மீண்டும் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது.
ஆனால், ஆபத்தை உணராமல், ஆழ்கடல் பகுதிக்கு சென்று பக்தர்கள் சிலர் குளித்தும், விளையாடியும் வருகின்றனர்.
இதனால், “கடலுக்குள் யாரும் செல்ல வேண்டாம்” என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் கடல் நீர் அவ்வப்போது உள்வாங்குவது என்பது வாடிக்கையான நிகழ்வு என்கின்றனர் பக்தர்கள்.