நீலகிரி மாவட்டம், தொரப்பள்ளி பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தொரப்பள்ளி பகுதியில் முகாமிட்டிருந்த மக்னா காட்டு யானை, அருகேயுள்ள புறமான வயல், அள்ளுர் வயல் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, பாக்கு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளது.
மேலும் கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.