திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியில் பழைமை வாய்ந்த மரத்தை அகற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நிலாவூர் நெடுஞ்சாலையில் ஜெயசங்கர் என்பவரது இடத்திற்கு செல்லும் வழியில் பழமை வாய்ந்த மரம் ஒன்று இருந்துள்ளது.
இதனை ஜெயசங்கர் வேரோடு வெட்டியதாக அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறும் மலைவாழ் மக்கள், வரும் காலங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.