தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்ததாலும், சுபமுகூர்த்ததினங்கள் இல்லாததாலும், மல்லிகை பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது.
கடந்த வாரங்களில் கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ, தற்போது கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதேபோல் சம்பங்கிப்பூ கிலோ 200 ரூபாய்க்கும், ரோஜாப்பூ கிலோ 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.