நாகையில் கோடை மழை கொட்டி தீர்த்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாகை மாவட்டத்தில், அனல் காற்றுடன் வெப்பம் வீசி வந்ததால், பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், கீழ்வேளூர், குருமனாங்குடி, நீலப்பாடி, குருக்கத்தி, மணலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்தது.
வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், பருத்தி சாகுபடிக்கு இந்த கோடை மழை பெரிதும் உதவும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.