சென்னை ஆவடியில் திடீரென பெய்த கோடை மழை நீருடன், கழிவு நீரும் கலந்து சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும், துர்நாற்றத்துடன் செல்லும் கழிவு நீரால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், தற்போது பெய்த மழையுடன் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.