யூ-டியூப் சேனல்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கரின் நேர்க் காணலை ஒளிபரப்பியதாக தனியார் யூ-டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தபோது, “யூ-டியூப் சேனல்கள் ஒழுங்கற்று செயல்படுவதை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது என்றார்.
மேலும், சவுக்கு சங்கரின் முன்ஜாமின் மனு மீது ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.