புதுக்கோட்டை மாநகராட்சியோடு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
மாநகராட்சியோடு வாகவாசல், தேக்காட்டூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை இணைப்பதாக அரசாணையும் வெளியிட்டது.
இந்நிலையில், 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தர்கா சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.