“இந்த தேர்தல், பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையிலான தேர்தல்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் போன்கீர் பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
நடந்து முடிந்த மூன்று கட்டத் தேர்தலில் நாங்கள் 200 இடங்களை நெருங்கிவிட்டதாகவும், தெலுங்கானாவில் வெற்றி பெற்றால் 400 தொகுதிகளை நிச்சயம் கைப்பற்றுவோம் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாகவும், தற்போது 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்று அமித் ஷா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக வெற்றி பெற்றால், எஸ்சி, எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை உயர்த்துவோம்” என உறுதியுடன் கூறினார்.