தாய்நாட்டிற்கு பணம்: முதலிடத்தில் இந்தியர்கள்!
Jan 14, 2026, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்நாட்டிற்கு பணம்: முதலிடத்தில் இந்தியர்கள்!

Murugesan M by Murugesan M
May 10, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2022ம் ஆண்டில் 9.28 லட்சம் கோடி ரூபாயை தாய் நாட்டுக்கு அனுப்பி இந்தியர்கள் சாதனை படைத்துள்ளார்கள். அண்மையில், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட உலக புலம் பெயர்வு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணிபுரியும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து, இந்தியாவில் வசிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு செய்யப்படும் பணப் பரிமாற்றமே ( migrant remittances ) ரெமிட்டன்ஸ் எனப்படும்.

அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ,என பல்வேறு நாடுகளில், கிட்டத்தட்ட ஒரு கோடியே 80 லட்சம் இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். இந்த வகையில், சர்வதேச அளவில் அயல்நாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இப்படி அயல் நாடுகளில் வசிக்கும் நபர்கள், தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணப்பரிமாற்றம் பற்றியான ஒரு அறிக்கையை ஆண்டுதோறும் ஐ.நா. சபை, உலக புலம் பெயர்வு அறிக்கை என வெளியிடுகிறது.

இந்த ஆண்டுக்கான அறிக்கை கடந்த செவ்வாய் கிழமை வெளியானது.

தரவரிசையில் முதல் 5 இடங்களில் இந்தியா, மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் இடம் பெற்றிருந்தாலும், மெக்சிகோ, சீனாவை முந்தி, தாய்நாட்டுக்கு அதிக அளவில் பணம் அனுப்பும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.

பல ஆண்டுகளாகவே தாயகத்துக்குப் பணம் அனுப்புவதில், இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அந்த அறிக்கையின் படி , 2010 ஆம் ஆண்டில் 53.48 பில்லியன் டாலர்கள், 2015 ஆம் ஆண்டில் 68.91 பில்லியன் டாலர்கள், 2020 ஆம் ஆண்டில் 83.15 பில்லியன் டாலர்கள், இந்தியாவுக்கு migrant remittances மூலம் கிடைத்துள்ளது.

இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டில் 111.22 பில்லியனுடன் இந்தியா பணம் அனுப்புவதில் முன்னணியில் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக , மெக்ஸிகோ 61.1 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தையும் , சீனா 51 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தையும் , பிலிப்பைன்ஸ் 38.05 பில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்தையும் , 30.04 பில்லியன் டாலர்களுடன் பிரான்ஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவைத் தவிர, ஆறாவது இடத்தில் பாகிஸ்தானும் மற்றும் எட்டாவது இடத்தில் பங்களாதேஷும் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புலம்பெயர்வு பணப் பரிமாற்றத்தின் தொகை, 2020 ஆம் ஆண்டு ,கோவிட் காலத்தில் குறைந்திருந்தாலும் பிறகு அதிகரிக்கத் தொடங்கியதாக புள்ளி விவரங்களுடன் காட்டும் உலக புலம்பெயர்வு அறிக்கை , இது வளர்ச்சியின் நல்ல அறிகுறி என்றும் தெரிவித்துள்ளது.

Tags: Money for the motherland: Indians at the top!
ShareTweetSendShare
Previous Post

பாஜக VS NOTA : இந்துாரில் சுவாரஸ்ம்!

Next Post

அட்சய திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு!

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies