சென்னை சூளைமேட்டில் நடைபயிற்சி சென்ற தம்பதியை நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், இவர், தமது மனைவி நீலாவுடன் வீட்டின் அருகே நடைப்பயிற்சி சென்றுள்ளார்.
அப்போது, அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவர் வளர்த்து வரும் நாய், நீலாவை கடித்ததுடன், அவரது கணவர் சுரேஷையும், துரத்திச் சென்று கடித்துள்ளது. காயமடைந்த தம்பதியரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே நுங்கம்பாக்கத்தில் ராட் வெய்லர் நாய் கடித்து சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது தம்பதியரையும் நாய் கடித்துள்ள சம்பவத்தால் சென்னைவாசிகள் பீதி அடைந்துள்ளனர்.