இஸ்ரேலின் தரை வழி தாக்குதலால் ரஃபா பகுதியில் இருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இஸ்ரேல் காசா போர் நீடித்து வரும் நிலையில் ஏராளமான மக்கள் ரஃபாவில் தங்கி வந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித்தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் பொதுமக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாகவும், குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.