சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிகை 10 -ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சிவகாசியில் ஒரு தொழிற்சாலையில் விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வேதனை அடைந்தேன். என் எண்ணங்கள் யாவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.