அரியானாவில் பாஜக அரசுக்கு நெருக்கடி இல்லை என அம்மாநில முதலமைச்சர் நயாப்சிங் சைனி தெரிவித்துள்ளார்.
90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபையில், தற்போது 88 உறுப்பினர்களே உள்ளனர்.
பா.ஜனதாவுக்கு 40 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சை மற்றும் லோக்தளம் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
பா.ஜனதாவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி மார்ச் மாதம் வாபஸ் பெற்றது. 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி நீடித்து வந்த நிலையில், 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.