தேனி மாவட்டத்தின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
கோடைக்காலம் என்பதால் தேனியில் வெயில் சுட்டெரித்த நிலையில் வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது கன மழை பெய்து வந்தது.
இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. வெப்பம் தணிந்து நீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.