கோவை மாவட்டம், ஆனைமலை அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன.
வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்தன.
இங்கு நள்ளிரவில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனால் சுமார் 75 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.