தென்காசி மாவட்டம், சுரண்டையில் மின்னல் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குலையநேரியைச் சேர்ந்த சிவசக்தி, தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களை காண்பதற்காக பங்களா சுரண்டைக்கு சென்றபோது பலத்த மழை பெய்துள்ளது.
இதனையடுத்து மழையில் நனையாமல் இருப்பதற்காக அருகில் உள்ள மரத்தடியில் சிவசக்தி ஒதுங்கி நின்றதாக கூறப்படுகிறது. அப்போது மின்னல் தாக்கியதில் சிவசக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.