ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
11 ஆட்டங்களில் விளையாடி 6 ஆட்டங்களில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, 12 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளுக்குமே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால், இன்றைய ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.