விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள பூலாங்கால் கிராமத்தில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி, ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
வீர ஜக்கதேவி கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற இந்த பந்தயம், கீழபூலாங்காலில் தொடங்கி, துத்திநத்தம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது.
இதில் 12 பெரிய மாட்டு வண்டிகளும், 28 சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. முதலிடம் பிடித்தவருக்கு 40 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.