ஈரோடு மாவட்டம், அந்தியூரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூரில் உள்ள ஒரு வீட்டில் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டில் இருந்த சுரேஷ்குமார் என்பவரை கைது செய்ததுடன், 600-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களையும் புறிமுதல் செய்தனர். பின்னர் சுரேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.