தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாகனங்களில் விதி மீறி பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை அரசு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
அண்ணா பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து வாகனங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களில், விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டிருந்த 75 டெசிபெலுக்கு அதிகமாக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.