10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகள் 87. 9 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநிலம் முழுவதும் ஆயிரத்து 364 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதில், ஆயிரத்து 364 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தம் 87. 9 சதவீதம் அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43 சதவீதமும், இருபாலர் பயிலும் பள்ளிகள் 91. 93 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.