10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாவட்ட வாரியாக மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதம்:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31 சதவீதத்துடன் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.02 சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது.
96.36 சதவீதத்துடன் ராமநாதபுரம் 3-வது இடத்தையும், 96.24 சதவீதத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.
95.23 சதவீதத்துடன் திருச்சி 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.விருதுநகர் மாவட்டம் 95.1 சதவீதமும், ஈரோடு மாவட்டம் 95.08 சதவீதமும் பெற்றுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் 94.77 சதவீதமும், தூத்துக்குடி மாவட்டம் 94.39 சதவீதமும், விழுப்புரம் மாவட்டம் 94.11 சதவீதமும் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்கள் கடைசி 5 இடங்களைப் பிடித்துள்ளன. இதில், வேலூர் மாவட்டம் 82.07 சதவீதத்துடன் மாநில அளவில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
			















