தென்காசியில் சங்கிலி பூதத்தார் கோயிலில் நடைபெற்ற சித்திரை கொடை விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
அச்சன்புதூர் அருகே நெடுவயலில் அருள்மிகு சங்கிலி பூதத்தார் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கொடை விழா, குற்றாலத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
இதனையொட்டி நடைபெற்ற பால்குடம் எடுக்கும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.