கரடியும், அதன் குட்டியும் மரத்தில் ஏறி, இறங்கி விளையாடும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன்கஸ்வான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கரடியும், அதன் குட்டியும் ஒரு மரத்தில் ஏறி இறங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
கூடவே, அவர் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.
அதில், “கரடிகளால் மரத்தில் ஏறமுடியாது என சிலர் கூறுவதை, இந்த கரடிகள் பொய் ஆக்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.