சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், 10 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.
சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பலர் பணியாற்றி வந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக, பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து ஆலையின் மேற்பார்வையாளர் சுரேஷ் , ஒப்பந்ததாரர் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கக் கோரி மருத்துவமனை முன்பு போராட்டம் நடைபெற்றது, இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.