மயிலாடுதுறையில் திடீரென வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்தது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக் கொட்டி தீர்த்தது.
குறிப்பாக, மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள செம்பனார்கோவில், பொறையார், பெரம்பூர், குத்தாலம், நீடூர், வில்லியநல்லூர், மல்லியம், மணல்மேடு மற்றும் மங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.
மழை காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.