நாகையில், போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் நில அளவிடும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
நாகூர் அருகே பனங்குடியில் சிபிசிஎல் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, கடந்த ஒன்றாம் தேதி முதல் பிள்ளை பனங்குடி பகுதியில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் வருவாய்த்துறையினர் நில அளவீடு பணியை மீண்டும் தொடங்கினர். இதனைத்தடுக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.