பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் சோதனை நடத்தினர்.
மதுரவாயிலில் உள்ள சவுக்கு சங்கரின் இல்லம் மற்றும் தி.நகரில் உள்ள அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர்.
வீடு மற்றும் அலுவலகத்தில் ஏதாவது கஞ்சா வைத்திருக்கிறாரா என்பது குறித்தும் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.