ராமநாதபுரம் பரமக்குடி அருகே தந்தை உயிரிழந்த நாளில், மனம் தளராமல் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி மாணவர் ஒருவர் 500க்கு 306 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் திபீஸ், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சமூக அறிவியல் தேர்வு அன்று அவரது தந்தை லட்சுமணன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையிலும், மனம் தளராமல் சமூக அறிவியல் தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில், 500க்கு 306 மதிப்பெண்கள் பெற்று மாணவன் வெற்றி பெற்றுள்ளார். “பொறியாளர் ஆகி தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன்” என திபீஸ் தெரிவித்தார்.