நியாயத்தையும், தர்மத்தையும் நிலை நாட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருப்பதாகவும், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
57வது ஆண்டு கம்பன் விழா, புதுச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
அப்போது பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாம் ஒரு மொழியை பேசுகின்றோம் என்றால் பிறமொழியை வெறுக்கக்கூடாது என தெரிவித்தார்.
மேலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது எனவும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.