கரூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 21 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குமரன் உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் 10-ஆம் வகுப்பில் மூன்று மாணவிகள் உட்பட 24 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதிய நிலையில், அனைவரும் தேர்ச்சி அடைந்தனர்.
நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று இந்த அரசு பள்ளி சாதனை படைத்துள்ளது.