10-ம் வகுப்ப பொதுத்தேர்வில் 97.31% மாணவர்கள் தேர்ச்சி அடைந்து மாநிலத்தில் முதலிடம் பிடித்து அரியலூர் மாவட்டம் சாதனை.
10-ம் வகுப்பு பொது தேர்வுக்கான வழிகாட்டல் கையேடு வழங்கியதன் காரணமாக மாநில அளவில் முதலிடம் பிடித்ததாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
96.41% மாணவர்களும், 98.35% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அரியலூர் மாவட்ட கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வரக்கூடிய கல்வி ஆண்டிலும் தேர்ச்சி சதவிகிதத்தை தக்க வைத்துக் கொள்ள இவ்வாண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.