டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெற்றுவிட்டார் என்பதற்காக அவர் ஒன்றும் அப்பாவி அல்ல என டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
அவர் டெல்லியில் அளித்த பேட்டியில்,
ஜூலை 1ஆம் தேதி வரைதான் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர், அவரது நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வருவதால், தேர்தலில் எந்தவொரு தாக்கமும் ஏற்படாது என்று கூறிய வீரேந்திர சச்தேவா, டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றிவாகை சூடும் என நம்பிக்கை தெரிவித்தார்.