“தேர்தலின் போது வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவது குழப்பதை ஏற்படுத்தும்” என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு மல்லிகார்ஜூன கார்கே ஒரு கடிதம் எழுதினார். அதில், “தேர்தல் நடைபெற்று 24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால், அப்படி செய்வில்லையே ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
“வாக்குப்பதிவு நடைபெற்று நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியிட்டதில், வாக்குப்பதிவு சதவீதத்தில் மாற்றம் இருந்தது ஏன்?” என்றும் கடிதத்தில் சந்தேகம் எழுப்பியிருந்தார்.
“மின்னணு வாக்குப்பதிவில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா” என்றும் “இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காதது ஏன்?” என்றும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், மல்லிகார்ஜூன கார்கே எழுதிய கடிதத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், “வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுவது உண்மைகளுக்கு புறம்பானது” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.
மேலும், “நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால், மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிக்கிறோம்” எனவும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.