நாடு முழுவதும் தாமரை மலரும் என நடிகை நமிதா நம்பிக்கை தெரிவித்தார்.
தனது பிறந்த நாளை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் நடிகை நமிதா சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் தாமரை மலரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஒடிசா, டெல்லி போன்ற இடங்களுக்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் நமிதா தெரிவித்தார்.
மேலும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் தவறு இருந்தால் நீதிமன்றம் முடிவெடுக்கும், இதில் நான் என்ன சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்