சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 5 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணகுமார், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன், போர் மேன் சுரேஷ் ஆகிய மூன்று பேரையும் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.