உதகை மலர்கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற இரவு நேர லேசர் ஷோ நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் சுமார் 20 ஆயிரம் கார்னிஷன் மலர்களைக் கொண்டு பூங்காவின் முகப்பு வாயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேலும், கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற லேசர் ஷோ நிகழ்ச்சியில், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனமாடியும், மின் அலங்காரங்களை கண்டும் ரசித்தனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்காட்சியயை கண்டு ரசித்தனர்.