கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பெய்த கனமழையால்
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோவை சுற்றுப்புற பகுதிகளில் கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக வெப்பம் குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மத்தம்பாளையம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.