திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்ந்து இதமான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.