பொது மக்கள் காட்டும் அன்பு தேர்தலில் போட்டியிட பலத்தை கொடுப்பதாக ஹமீர்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் அனுராக் சிங் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ ஆவா தேவி கோயிலில் மத்திய அமைச்சரும், ஹமீர்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளருமான அனுராக் சிங் தாகூர், சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமக்கு தொகுதி மக்களிடம் பலத்த வரவேற்பு உள்ளதாகவும், எனவே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார்.