கனமழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்-ரிஷிகேஷ் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கன மழை காரணமாக சிரோபகத் பகுதியில் பத்ரிநாத் – ரிஷிகேஷ் இடையேயான சாலையை கோட்வால் அதிகாரிகள் தற்காலிகமாக மூடினர்.
இதனால் சுற்றுலா வாகனங்கள் ஸ்ரீநகர் மற்றும் கலியாசோத் வரை அணிவகுத்து நிற்கின்றன.